பப்புவா நியுகினியில் கர்ப்பிணிகள் உட்பட 25 பேர் படுகொலை-உடல்கள் துண்டுதுண்டாக சிதைப்பு

பப்புவா நியுகினியில் கர்ப்பிணிப்பெண்கள் குழந்தைகள் உட்பட 25 ற்கும் அதிகமானவர்கள் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பப்புவா நியுகினியின் ஹெலா மாகாணத்தில் பழங்குடியினத்தவர்களிற்கு இடையில் இடம்பெற்றுவரும் தொடர்மோதல்களின் போதே இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளன

டரிபொரி மாவட்டத்தின் இரு கிராமங்களில் இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

முனிமா கிராமத்திலும் கரிடா கிராமத்திலும் இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளன படுகொலை செய்யப்பட்டவர்களில் இருசர் கர்ப்பிணிப்பெண்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரிடா கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களி;ன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

தடியொன்றுடன் பிணைக்கப்பட்டுள்ள நிலையில் பல உடல்களை அந்த படங்களில் காணமுடிகின்றது.

சிலர் துண்டுதுண்டாக வெட்டப்பட்டுள்ளனர் அவர்களின் உடல்பாகங்களை அடையாளம் காணமுடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படுகொலைகளில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வதாக உறுதியளித்துள்ள பப்புவாநியுகினியின் பிரதமர் ஜேம்ஸ் மராப்பே தனது வாழ்க்கையின் மிகவும் துயரமான நாள் இது என குறிப்பிட்டுள்ளார்

நான் காலையில் எழுந்து எனது சமையலறைக்கு சென்றவேளை துப்பாக்கி சத்தங்கள் கேட்டன சில வீடுகள் எரிந்துகொண்டிருந்தன என கரிடா உhப சுகாதார நிலையத்திற்கு பொறுப்பாகவுள்ள பிலிப் பிமுவா என்ற நபர் தெரிவித்துள்ளார்.

நான் எதிரிகள் கிராமத்திற்கு வந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து அங்கிருந்து தப்பியோடி மரங்களிற்குள் ஒளிந்திருந்தேன் என மேலும் தெரிவித்துள்ள அவர் நான் திரும்பி வந்து பார்த்தவேளை உடல்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டன வீடுகள் எரிக்கப்பட்டிருந்தன எனவும் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்டவர்கள் அனைவரையும் எனக்கு தெரியும் அவர்கள் அனைவரும் எனது மக்கள் ஆனால் அவர்களது உடல்கள் மிக மோசமாக சிதைக்கப்பட்டுள்ளதால் அவர்களது உடல்களை எங்களால் அடையாளம் காணமுடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்டிருந்தனர் சில உடல்பாகங்களை அடையாளம் காணமுடியவில்லை எது கை எது கால் என்பது தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் உடல்களை நுளம்புவலையில் சுற்றி எடுத்தபடி அந்த கிராமத்திலிருந்து தப்பியோடி வந்துவிட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!