கவிழ்ப்பதா – காப்பாற்றுவதா? – நாளையே முடிவு!

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளையே இறுதி முடிவை எடுக்கவுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை ஜேவிபி கொண்டு வர்ந்துள்ள நிலையில் இன்றும் நாளையும் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நடத்தப்படவுள்ளது. நாளை வாக்கெடுப்பை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக ஜே.வி.பியுடன் பிரதான எதிர்க்கட்சியான மஹிந்த தரப்பினரும் வாக்களிக்கவுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது நிலைப்பாடு என்ன என்பதை நாளை தீர்மானிக்கவுள்ளது.

கடந்த திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தமக்கு வேண்டும் என பிரதமர் நேரடியாக ஆதரவை கேட்டிருந்தார். எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது நிலைப்பாடு குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை என்பதை கூறியதுடன் தமது பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் பேசி தீர்மானம் எடுக்கப்படும் என கூறியிருந்தனர்.

அதற்கமைய நேற்றுக் காலை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற குழு கூடியது. இதன்போது தாம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெளிவுபடுத்தியிருந்தார். எனினும் ஆதரிப்பதா இல்லையா என்பது கூறித்து இறுதி தீர்மானம் ஒன்றினை எடுக்கவில்லை.

இந்நிலையில் நாளை காலை மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தைக் கூட்டி இறுதி தீர்மானத்தை எடுப்பதென தீர்மானித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!