தடுப்பில் உள்ளவர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன – ரணில்

தடுப்புக்காவலிலும் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. இவர்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று பிரதமரிடம் கேள்விகேட்கும் நேரத்தில், உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் மற்றும் அதன் பிறகு குருணாகல் குளியாப்பிட்டியவில் அடிப்படைவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கைதான 161 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு 167 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 99 பேர் சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ளனர்.

தடுப்புக்காவலிலும் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. இவர்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் குளியாபிடிய, ஹெட்டிபொல தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 39 பேர் கைதாகியுள்ளனர். இவர்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் விளக்கமளித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவற்றுக்கு உதவி வழங்கியோர் தொடர்பாக விசாரணை தொடர்ந்து இடம்பெறுகிறது. தவறு செய்தோருக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!