முன்னைய ஆட்சியில் தகுதியற்ற இராஜதந்திரிகள்

அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், அவுஸ்ரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட முக்கியமான 8 நாடுகள் உள்ளிட்ட 26 நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில், ஒன்பது நாடுகளில் இருந்த தூதுவர்கள் மாத்திரமே, துறைசார் இராஜதந்திரிகளாக இருந்தனர் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவின் இந்தப் பதிலை சிறிலங்கா அரசாங்க கொரடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

ஜேவிபி உறுப்பினர் நளின் ஜெயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கே இந்த பதில் அளிக்கப்பட்டது.

கடந்த ஆட்சிக்காலத்தில் 26 நாடுகளில் இருந்த சிறிலங்கா தூதரகங்களில், 17 தூதரகங்களில் துறைசார் இராஜதந்திரிகள் அல்லாதோரே தூதுவர்களாக பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

அந்த 17 பேரில், இரண்டு பேர் , கபொத உயர்தரம் கல்வியை மட்டும் பூர்த்தி செய்தவர்கள்.

ஏனையவர்கள் பட்டம் பெற்றிருந்த போதும், வெளிவிவகாரச் சேவையுடன் தொடர்பில்லாதவர்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!