ஆயர் வரும் வரை பேச்சு ஒத்திவைப்பு!

திருக்கேதீஸ்வரம் ஆலய வீதி வளைவு அமைப்பது தொடர்பாக மன்னார் மாவட்ட செயலகத்தில், அமைச்சர் மனோ கணேசனின் பணிப்புரையின் பேரில், இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேச்சுவார்த்தை, மன்னார் ஆயர் நாடு திரும்பும் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு, இரண்டு மதத் தலைவர்கள், ஆலய நிர்வாகம், குறித்த மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும், மன்னார் ஆயர் இமானுவேல் பெர்ணான்டோ, வெளிநாட்டுக்குச் சென்றுள்ளமையால், இந்தக் கலந்துரையாடலை, பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்குமாறு, வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் அமைச்சர் மனோ கணேசனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்தே, இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!