ஒளிப்படங்களை எடுப்பதற்காக சிங்கங்களை சுட்டுக் கொன்ற கனேடியத் தம்பதி!

தென்னாப்பிரிக்காவில் ஒரு சஃபாரி பூங்காவில் ஔிப்படம் எடுக்கச் சென்ற கனடா நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் இரண்டு வளர்ந்த சிங்கங்களை சுட்டுக் கொன்றுள்ளனர். குறித்த கனேடியத் தம்பதியினர் உயிரிழந்த சிங்கத்தின் பின்னால் அமர்ந்து கொண்டும், முத்தமிட்டுக்கொண்டும் ஔிப்படம் எடுத்துள்ளனர். டெரன் மற்றும் கரோலின் கார்டர் என்ற பெயர்களை கொண்ட குறித்த தம்பதி லெஜீலியா சஃபாரிஸ் வழியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது இந்தச் செயலை செய்துள்ளனர்.

ஔிப்படம் எடுப்பதற்காக அங்கிருந்த இரண்டு சிங்கங்களை சுட்டுக் கொன்றுள்ளதுடன், அந்த ஔிப்படங்களை பேஸ்புக் வலைத்தளத்திலும் பதிவேற்றியுள்ளனர்.அவர்கள் கிழக்கு கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்தின் எட்மன்டனைச் சேர்ந்தவர்களாவர்.

அதேவேளை, குறித்த இருவரும் டாக்ஸிடெர்மி எனப்படும் விலங்குகளின் தோல்களை பதப்படுத்தி, ஏற்றுமதி செய்யும் வணிகத்தை நடத்துவதற்காக , வேட்டைகளில் பங்கேற்ற போதிலும் தங்களை ‘உணர்ச்சிவசப்பட்ட பாதுகாவலர்கள்’ என்று குறிப்பிடடுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!