ரிஐடியின் 12 மணிநேர தொடர் விசாரணை- திக்குமுக்காடிய மகிந்த அணி எம்.பி!

பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்த கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவிடம், 12 மணி நேரம் தொடர் விசாரணைகள் நடத்தப்பட்ட பின்னர் வீட்டிற்கு செல்ல அனுமதித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கண்டி பிரதேசத்தில் அண்மையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!