அமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது – வாசுதேவ

அமெரிக்க – சீன முரண்பாடுகளுக்கு நாட்டை பலியாக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அமெரிக்கா ஆசிய நாடுகளில் நிரந்தர ஆதிக்கம் செலுத்தும் திட்டங்களை தற்போது வகுக்கின்றது. சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் பாரிய பொருளாதார போட்டித் தன்மை காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் எமது நாட்டின் இறையான்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஒப்பந்தங்களை அமெரிக்காவுடன் அரசாங்கம் செய்துக் கொள்வது எதிர்காலத்தில் நாட்டை பாரிய நெருக்கடிக்குள் கொண்டு செல்லும் என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையிலான அதிகார போட்டியே கடந்த நான்கு வருட காலமாக அரசாங்கம் பலவீனமடைவதற்கு பிரதான காரணம் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!