கன்னியாவில் விகாரை கட்ட தடை?

கன்னியா விவகாரம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் வரை, எந்தவித விகாரை கட்டுமாண பணிக்கும் இடமளிக்க வேண்டாம் என திருகோணமலை மாவட்ட செயலாளர் புஸ்பகுமாரவுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கூறியுள்ளார்.

முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர் மனோ கணேசன், தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு இந்த விடயம் தொடர்பில் கேட்டபோது, கன்னியாவில், விகாரை கட்டும்படி தொல்பொருள் திணைக்களத்துக்கு கடிதம் எழுதும்படி தனது இணைப்பு செயலாளருக்கு தான் கூறவில்லை என ஜனாதிபதி என்னிடம் கூறினார். அப்படி எழுதப்பட்டிருந்தால் இதுபற்றி விசாரிப்பதாக உறுதியளித்தார்.

அத்துடன், இது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழுவை சந்திக்க என்னிடம் அவர் உடன்பட்டதுடன், இதற்கான திகதி விரைவில் தீர்மானிக்கப்படும்.

இதையடுத்து, இவ்விவகாரம் பற்றி இறுதி தீர்மானம் எடுக்கப்படும் வரை, எந்தவித விகாரை கட்டுமான பணிக்கும் கன்னியாவில் இடம் கொடுக்க வேண்டாம் என திருகோணமலை மாவட்ட செயலாளர் புஸ்பகுமாரவை அழைத்து நான் கூறியுள்ளேன்.”

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!