ஷாபி தொடர்பான விசாரணைகள் முழுமையடையவில்லை – ராஜித

குருணாகல் – வைத்தியர் ஷாபி தொடர்பான சுகாதார அமைச்சின் விசாரணைகள் தொடர்வதாக தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, இதுவரையில் குருநாகல் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் சிகிச்சைகள் குறித்தும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

குருணாகலை போதனா வைத்தியசாலையின் மகற்பேற்று வைத்தியரான மொஹமட் சேகு சியாப்தின் ஷாபி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சின் செயலாளர் தலைமையில் 6 பேர் அடங்கிய வைத்திய குழு நியமிக்கப்பட்டது.

இந்த விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. அதேவேளை குற்றப் புலனாய்வு பிரிவினரும் வைத்தியர் ஷாபி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவினர் தொடர்ந்தும் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் பாதிக்கப்பட்ட தாய்மார்களிடமும் தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பரந்துப்பட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுகின்றது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!