அம்பாந்தோட்டையில் முதலிட பிரான்ஸ் ஆர்வம்

அம்பாந்தோட்டை துறைமுகத்திலும், தோட்டத் தொழில்துறையிலும் முதலீடுகளைச் செய்வதற்கு பிரெஞ்சு முதலீட்டாளர்கள் அக்கறை கொண்டுள்ளதாக, சிறிலங்காவுக்கான பிரெஞ்சு தூதுவர் எரிக் லவேர்டு தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நேற்றுக் காலை மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறுள்ளது.

அரசியல் மற்றும் பொருளாதார கொள்கை ரீதியாக உறுதியான நிலையை ஏற்படுத்தி, வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க உகந்த சூழலை உருவாக்கினால், சிறிலங்கா பல முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாகவும், பிரெஞ்சு தூதுவர் இதன் போது, கூறினார்.

பூகோள போக்குவரத்தின் இதயமாக – மூலோபாயம் முக்கியத்துவம் பெற்ற இடத்தில் அம்பாந்தோட்டை துறைமுகம் அமைந்துள்ளது.

எனவே எந்தவொரு முதலீட்டாளருக்கும் இது சிறந்த வாய்ப்பாக இருக்கும்.” என்றும் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!