தீர்க்கமான கட்டத்தில் விசாரணைகள்!

ஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்க படுகொலை, எக்னெலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை, கீத் நொயார், உபாலி தென்னகோன் ஆகிய ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் போன்றவற்றுக்கு உத்தரவிட்டவர்கள் யார் என்ற விசாரணைகள் தீர்க்கமான கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லசந்த விக்ரமதுங்க கொலை தவிர்ந்த ஏனைய சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் என கூறப்படும் இராணுவ புலனாய்வாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களே லசந்த கொலையுடனும் தொடர்புபட்டுள்ளதாக சி.ஐ.டி. சில சான்றுகளை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.

இந் நிலையில் அந்த புலனாய்வாளர்களுக்கு குறித்த ஊடகவியலாளர்களுடன் எவ்வித தனிப்பட்ட பகைமையும் இல்லை என்பதை உறுதி செய்துள்ள சி.ஐ.டி. யாரின் தேவைக்காக அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து தீர்க்கமான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக நீதிமன்றங்களுக்கு அறிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!