ஹொங்கொங்கில் புகையிரத நிலையத்துக்குள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய கும்பல்

ஹொங்­கொங்கின் யேன் லோங் பிராந்­தி­யத்­தி­லுள்ள புகை­யி­ரத நிலை­யத்­துக்குள் முக­மூ­டி­ய­ணிந்த குழு­வொன்று கம்­புகள் மற்றும் பொல்­லு­க­ளுடன் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு பிர­வே­சித்து தாக்­குதல் நடத்­தி­யதில் குறைந்­தது 45 பேர் காய­ம­டைந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

வெள்ளை ரீசேர்ட் அணிந்­தி­ருந்த அந்தக் குழு­வினர் புகை­யி­ரத நிலைய மேடை­யி லும் தரித்­தி­ருந்த புகை­யி­ர­தங்­க­ளுக்­குள்ளும் பிர­வே­சித்து அங்­கி­ருந்த மக்கள் மீது கண்­மூ­டித்­த­ன­மாக தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது. இந்தத் தாக்­குதல் சம்­பவம் அந்தப் பிராந்­தி­யத்தில் பெரும் பதற்­ற­நி­லையை உரு­வாக்­கி­யுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

காய­ம­டைந்­த­வர்­களில் ஒரு­வரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தாக மருத்­து­வ­மனை வட்­டா­ரங்கள் கூறு­கின்­றன.

ஹொங்­கொங்கில் இடம்­பெற்ற பிந்திய ஜன­நா­யக ஆத­ரவு ஆர்ப்­பாட்ட ஊர்­வல த்தை பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் இறப்பர் குண்டுப் பிர­யோ­கங்­களை மேற்­கொண்டு கலைத்த நிலை­யி­லேயே இந்தத் தாக்­குதல் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. புகை­யி­ரத நிலை­யத்தில் தாக்­குதல் நடத்­திய கும்பல் யார் என்­பது கண்­ட­றி­யப்­ப­ட வில்லை.

சட்­டத்தின் ஆட்சி நடை­மு­றை­யி­லுள்ள ஹொங்­கொங்கில் இத்­த­கைய தாக்­குதல் ஒன்று நடத்­தப்­பட்­டுள்­ளமை முற்­றிலும் ஏற்றுக்கொள்­ளப்­பட முடி­யாத ஒன்­றெ­னவும் அதனை வன்­மை­யாக கண்­டிப்­ப­தா­கவும் இது தொடர்பில் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் ஹொங்கொங் பிராந்­திய அர­சாங்­கத்தால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அன்­றைய தினம் ஷியுங் வான் பிர­தே­சத்தில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கும் பொலி­ஸா­ருக்­கு­மி­டையில் இடம்­பெற்ற மோத­லொன்­றுக்கு சில மணித்­தி­யா­லங்கள் கழித்து அந்­நாட்டு நேரப்­படி இரவு 10.30 மணி­ய­ளவில் இந்தத் தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸார் கூறு­கின்­றனர்.

அந்தப் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற ஆர்ப் ­பாட்ட ஊர்­வ­லத்தின்போது ஆர்ப்பாட்டக் ­கா­ரர்கள் அர­சாங்க அலு­வ­ல­கங்கள் பல வும் அமைந்­துள்ள சென்ரல் பிராந்­தி­யத்தை நோக்கிச் செல்ல முற்­பட்டவேளை அவர்­களை வான் செயி எனும் இடத்தில் எதிர்­கொண்ட பொலிஸார் அவர்­களைக் கலைக் கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டபோதே மேற்­படி மோதல் இடம்­பெற்­றுள்­ளது. இதன்­போது சுமார் 4இ000 பொலிஸார் அந்தப் பிராந்­தி­யத்தில் பணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­ றது.

ஹொங்கொங் தலைவர் காரி லாம் மக்க ளின் கோரிக்­கைக்கு காதை செவி­டாக வைத்­தி­ருப்­பதை நிறுத்த வேண்டும் என குடி­யியல் மனித உரி­மைகள் முன்­ன­ணியைச் சேர்ந்த பொன்னி லியுங் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஆர்ப்­பாட்ட ஊர்­வ­லத்தில் 430இ000 பேர் பங்­கேற்­ற­தாக அதன் ஏற்­பாட்­டா­ளர்கள் தெரி­விக்­கின்ற அதே­ச­மயம் அந்த ஊர்­வ­லத்தில் 138இ000 வரை­யா­ன­வர்­களே பங்­கேற்­ற­தாக பொலிஸார் கூறு­கின்­றனர்.

ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்கள் ‘அமை­தி­யான ஊர்­வ­லங்­களால் பய­னில்லை என்பதை எமக்குக் கற்றுத்தந்­துள்­ளீர்கள்’ என்­பது உள்­ள­டங்­க­லான சுலோ­கங்­களை ஹொங்­கொங்­கி­லுள்ள சீன மத்­திய அர­சாங்கக் கட்­டி­ட­மான தொடர்பு அலு­வ­ல­கத்தின் சுவர்­களில் எழு­தி­ய­துடன் பொலிஸ் நிலை­ய­மொன்­றுக்கு வெளி­யி­லுள்ள சி.சி.ரி.வி. கண்­கா­ணிப்பு காணொளிப் படக்­க­ரு­வி­களில் வர்­ணப்­பூச்சை விசிறிச் சென்­றதாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் இந்த ஆர்ப்­பாட்ட ஊர்­வ­லத்தின்போது ஆர்ப்­பாட்ட துண்டுப் பிர­சு­ரங்­க­ளுடன் பெருமளவு வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹொங்கொங்கில் கைதுசெய்யப்பட்டவர் களை விசாரணைக்காக சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு அனுப்பும் சட்டமூலமொன் றிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பமான ஆர்ப்பாட்டங்கள் அந்த சட்டமூலம் இரத் துச் செய்யப்பட்ட நிலையில் தற்போது ஜன நாயக சீர்திருத்தத்தை முன்னெடுக்க வலியு றுத்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!