நான் நினைத்தால் ஆப்கானை உலகிலிருந்தே முற்றாக அழித்துவிடமுடியும் – டிரம்பின் கருத்தினால் சர்ச்சை

ஆப்கானிஸ்தானை அமெரிக்க நினைத்தால் உலகிலிருந்தே முற்றாக அழித்துவிடமுடியும் என்ற அர்த்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள ஆப்கானிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து விளக்கம் கோரியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இடம்பெறுகின்ற யுத்தத்தில் என்னால் ஒரு வாரத்திற்குள் வெற்றிபெற முடியும் ஆனால் நான் 10 மில்லியன் மக்களை கொலை செய்ய விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை வெள்ளைமாளிகையி;ல் வரவேற்றவேளை டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

தலிபானுடன் சமீபத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் காரணமாக ஆப்கான் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க பொலிஸாகவே நடந்துகொள்கின்றது படைவீரர்களை போல நடந்துகொள்ளவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவினால் தனது மிகப்பெரும் படைபலத்தை பயன்படுத்தி உடனடியாக ஆப்கான் மோதலை முடிவிற்கு கொண்டுவர முடியும் ஆனால் பத்து மில்லியன் மக்கள் கொல்லப்படுவார்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நாங்கள் பொலிஸ்காரர்களை போல செயற்படுகி;ன்றோம், நாங்கள் படையினர் போல செயற்படவில்லை,நாங்கள் ஆப்காளிஸ்தானில் யுத்தத்தில் ஈடுபட்டு வெல்ல விரும்பினால் ஒரு வாரத்தில் எங்களால் அதனை சாதிக்க முடியும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நான் யுத்தத்தில் வெற்றிபெற விரும்பினால் உலகிலிருந்தே ஆப்கானை துடைத்தெறிய முடியும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

பாக்கிஸ்தான் அமெரிக்காவை மதிக்கவில்லை அதன் ஜனாதிபதிகளை மதிக்கவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் இந்த கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ள ஆப்கான் அதிகாரிகள் ஆப்கான் ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்கு டிரம்ப் மதிப்பளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!