ஐ.நா அறிக்கையாளரை அனுமதித்த பதில் வெளிவிவகார செயலர் பதவி நீக்கம்

தலைமை நீதியரசர் மற்றும் மேல்நீதிமன்ற நீதிபதிகளை, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சந்திப்பதற்கு ஒழுங்கு செய்யுமாறு நீதியமைச்சின் செயலருக்கு அறிவுறுத்தலை அனுப்பிய- வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலர் அகமட் ஜவாட்டை பதவியில் இருந்து நீக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மாலை, சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கான உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல், சிறிலங்காவின் நீதிபதிகளைச் சந்திக்கவிருந்த நிலையில், அதனை தடுக்குமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சியினர் கோரினர்.

அதற்கமைய, அந்தச் சந்திப்பை நிறுத்துவதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இந்தநிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சர் ரவிநாத ஆரியசிங்கவுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், வெளிவிவகார அமைச்சின் பதில் செயலராகவும், மேலதிக செயலராகவும் உள்ள அகமட் ஜவாட்டை அந்தப் பதவியில் இருந்து நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதேவேளை, சபாநாயகர் கரு ஜெயசூரியவும், வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலர் அகமட் ஜவாட்டை அழைத்து, எதிர்க்கட்சியினரின் கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!