கண் முன்னே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தாய்: தந்தையின் கழுத்தை இறுக்க பிடித்துக்கொண்டு கதறும் குழந்தைகள்

மெக்­ஸிக்­கோவின் தமோ­லிபாஸ் பிராந்­தி­யத்­தி­லி­ருந்த றியோ கிரான்ட் ஆற்றைக் கடந்து அமெ­ரிக்­காவில் பிர­வே­சிக்கும் முயற்­சியில் ஈடு­பட்ட பெண்­ணொ­ருவர் தனது கணவர் மற்றும் இரு சின்னஞ்­சிறு மகன்மார் முன்­னி­லையில் ஆற்றில் அடித்துச் செல்­லப்­பட்டு உயி­ரி­ழந்­துள்ளார்.

மேற்­படி நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சி அந்­தப் பிராந்­திய கடற்­க­ரையில் பொருத்­தப்­பட்­டி­ருந்த கண்­கா­ணிப்பு காணொளிக் கரு­வி­களில் பதி­வா­கி­யுள்­ளது.

சம்­பவ தினம் சிறு­வர்கள் உள்­ள­டங்­க­லாக சுமார் 30 பேர் அந்த ஆற்றைக் கடக்கும் முயற்­சியில் ஈடு­பட்டபோதே இந்த விப­ரீத சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

இதன்­போது தனது தாய் ஆற்றில் அடித்துச் செல்­வதைக் கண்ட அவ­ரது மகன்­மாரில் ஒரு சிறுவன் ஆற்றில் தன்னைத் தாங்கிப் பிடித்துக் கொண்­டி­ருந்த தந்­தையின் கழுத்தை கட்டிப் பிடித்­த­வாறு அம்மா, அம்மா என கதறி அழு­வது காணொளிக் காட்­சியில் பட­மா­கி­யுள்­ளது.

இந்­நி­லையில் மெக்­ஸிக்கோ படை­யி­னரால் குறிப்­பிட்ட தந்தை, இரு மகன்மார் உள்­ள­டங்­க­லாக அனைத்துக் குடி­யேற்­ற­வா­சி­களும் பாது­காப்­பாக மீட்­கப்­பட்டு கரைக்கு அழைத்து வரப்­பட்­டுள்­ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!