வடக்கு ஆளுநரை ஐ.நா பிரதிநிதி சந்திப்பு!

இலங்கைக்கு வந்துள்ள சுதந்திர உரிமைக்கான ஐ.நா விசேட பிரதிநிதி கிளெமென்ட் யலெற்சோசி வூலுக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

வட மாகாண ஆளுநர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் அரசாங்கத்துடனும் இணைந்து வட மாகாணத்தினுள் வசிக்கும் பொதுமக்களின் வாழ்க்கையினை மேம்படுத்த முன்னெடுக்கும் நிலம்இ நீர்இ நிதி மற்றும் நீதி தொடர்பான செயற்பாடுகள் தொடர்பில் ஐ.நா விசேட பிரதிநிதிக்கு இதன் போது விளக்கமளித்தார்.

காணியற்ற மக்களுக்கு காணிகளையும், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரினை வழங்குவதற்கு வடமராட்சி களப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், வட மாகாணத்தில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கி ஒன்றை ஸ்தாபிப்பது குறித்தும் செயற்பட்டு வருவது தொடர்பில் ஆளுநர் இதன்போது விரிவாக விளக்கமளித்தார்.

இதேவேளை, இலங்கையில் ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் தடைபட்டிருந்த பாதுகாப்பு படைகளின் வசமிருந்த் பொதுமக்களின் காணிகள் படிப்படியாக விடுவிப்பது தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதனையும் இதன்போது ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!