பிரதமர், அமைச்சர்களிடம் ஓகஸ்ட் 6இல் விசாரணை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரித்து வரும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், வரும் ஓகஸ்ட் 6ஆம் நாளுக்கு முன்னதாக சாட்சியத்தைப் பெறவுள்ளது.

அத்துடன், முன்னர் சட்டம் ஒழுங்கு அமைச்சராகப் பதவி வகித்தவர்களான, அமைச்சர்கள் சாகல ரத்நாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரிடமும் தெரிவுக்குழு சாட்சியங்களைப் பெறவுள்ளது.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வரும் ஓகஸ்ட் 6ஆம் நாள் விசாரணைக்கு வருமாறு, நாடாளுமன்றத் தெரிவுக்குழு அழைக்கவுள்ளதாக, தெரிவுக்குழு உறுப்பினரான பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

தெரிவுக்குழுவில் முன்னிலையாகும்படி, சிறிலங்கா பிரதமருக்கு இன்று நாடாளுமன்றத்தில் அழைப்பு அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!