போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல்!

ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த, பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை சிகிச்சை பலனின்றி பலியானது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஞாயிற்றுக்கிழமை மாலை தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஷாப்பூர் ((Shahpur)) மற்றும் சாவ்ஜியான் ((Saujiyan)) ஆகிய இடங்களில் இலகுரக பீரங்கிகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், ஒரு பெண்ணும், அவரது பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையும், மற்றொருவரும் காயமடைந்தனர்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தை, சிகிச்சை பலனின்றி இன்று காலையில் பலியானது. மேலும் காயமடைந்த மற்ற இருவரும் உயர் சிகிச்சைக்காக, ஜம்முவிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தினரின் எல்லை மீறிய தாக்குதலுக்கு,

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!