ராஜஸ்தானில் புதிய சட்டம்: கூட்டமாக அடிப்பதை வேடிக்கை பார்த்தாலும் சிறைத்தண்டனை!

மத்தியப்பிரதேச மாநிலம் அலிராஜ்புர் எனும் ஊரில் ஆடு திருடியதாக கைது செய்யப்பட்ட ஒருவனை பலர் கட்டி வைத்து தாக்கினர். நிராயுதபாணியாக உள்ள நபர் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிரான சட்டத்தை ராஜஸ்தான் அரசு கடுமையாக்கியுள்ளது. இதன்படி ஒருவரை இரண்டு பேருக்கு மேல் சேர்ந்து தாக்கினால் அது தண்டனைக்குரிய கடும் குற்றமாகும்.

பாதிக்கப்பட்ட நபருக்கு ஏற்படும் மரணம் அல்லது காயத்தைப் பொருத்து தாக்கியவர்களுக்கு தண்டனை அளிக்கப்படும். அதிகபட்சமாக இதில் ஈடுபடுகிறவர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் முதல் ஆயுள் தண்டனையும், 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். தாக்குதல் நடத்துவதை வேடிக்கை பார்த்தாலும் குற்றம் என்று இச்சட்டம் கூறுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!