ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டது இந்தியாவின் உள்விவகாரம் – சிறிலங்கா பிரதமர்

இந்தியாவில் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு, ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவில், இந்தியாவின் முதல் பௌத்த மாநிலமாக லடாக் உருவாகியிருப்பதாகவும், இந்த நடவடிக்கை இந்தியாவின் உள்விவகாரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர், “லடாக் இறுதியாக யூனியன் பிரதேசமாக மாறும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.

70வீதத்துக்கும் அதிகமான பௌத்தர்களைக் கொண்ட, லடாக் பௌத்த பெரும்பான்மையைக் கொண்ட முதல் இந்திய மாநிலமாக இருக்கும்.

லடாக் உருவாக்கம் மற்றும் அதன் விளைவான மறுசீரமைப்பு ஆகியவை இந்தியாவின் உள் விவகாரங்கள்.

நான் லடாக் சென்றுள்ளேன், அது ஒரு பயணத்துக்கான பெறுமானம் கொண்டது. ” என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!