பாகிஸ்தான் சிறையில் இருந்த பயங்கரவாதி ஹபீஸ் சயீத் விடுதலை

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீதை பாகிஸ்தான் அரசு இன்று விடுதலை செய்துள்ளது.

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் பயங்கரவாதி ஹபீஸ் சயீத். இவர் பாகிஸ்தானில் ஜமாத் உத் தவா என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

அமெரிக்காவின் தொடர் அழுத்தத்துக்கு அடிபணிந்த பாகிஸ்தான் அரசு, பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக ஹபீஸ் சயீத் மற்றும் அவரது அமைப்பை சேர்ந்த மேலும் 12 பேரை கடந்த 17-ம் தேதி கைது செய்தது.

பயங்கரவாதி ஹபீஸ் சையத் மற்றும் அவரது கூட்டாளிகள் 12 பேரின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து உத்தவிட்ட நீதிபதி, ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் ஹபீஸ் சயீத் மீதான முழுமையான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

இந்நிலையில், பாகிஸ்தான் சிறையில் இருந்த பயங்கரவாதி ஹபீஸ் சயீத் விடுதலை செய்யப்பட்டு உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கிய சில நாட்களில் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!