இந்திய இராணுவத்தின் உதவியைக் கோரினார் ஜனாதிபதி மைத்திரி!

போதைப்பொருள் கடத்தல் காரணமாக, இலங்கைக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், இதனைத் தடை செய்வதற்கு, இந்திய இராணுவத்தின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வந்திருந்த இந்திய இராணுவ தளபதி ஜெனரல் பீபின் ராவத், இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தார்.

இதன்போது, சகோதர அயல்நாடுகள் என்ற வகையில், இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவுகளை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, இந்த உறவை மேலும் பலப்படுத்துவது, தனது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகுமெனக் குறிப்பிட்டார்.

இருநாடுகளுக்குமிடையிலான புலனாய்வுத் தகவல் பிரிவுகளைப் பலப்படுத்துதல், தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதாகுமெனக் குறிப்பிட்ட இந்திய இராணுவத் தளபதி , இதற்கு இலங்கை அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

புலனாய்வுப் பிரிவைப் பயிற்றுவித்தல் மற்றும் இரு நாடுகளுக்கிடையில் நவீன தொழில்நுட்பப் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!