காஷ்மீரின் உண்மை நிலை இதுவா? வைரல் புகைப்படங்களை நம்பலாமா?

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் நிலவும் சூழல் பற்றி சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பகிரப்படுகின்றன.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 370 சட்டப்பிரிவு திரும்பப் பெறப்பட்டதில் இருந்து ஜம்மு காஷ்மீர் பற்றி பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இவற்றில் சில பதிவுகள் உண்மையாகவும், சில பதிவுகள் போலியாகவும் இருக்கின்றன.

அவ்வாறான பதிவு ஒன்றில், காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின் பொது மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என கூறி சில புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளன. இதனை பலர் தங்களது வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஆய்வில் வைரலாகும் இந்த பதிவுகளில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. வைரல் புகைப்படங்கள் காஷ்மீர் பகுதியில் எடுக்கப்பட்டதில்லை. நான்கு புகைப்படங்களும் இரண்டு ஆண்டுகள் பழமையானதாகும். புகைப்படங்களை ரிவர்ஸ் சர்ச் செய்ததில், இவை பலமுறை பல்வேறு சமூக வலைத்தளங்களில், செய்தி தளங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

வைரல் புகைப்படத்தில் ஒன்று ஒன்பது ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டதாகும். காஷ்மீர் பகுதியில் தடை படிப்படியாக விலக்கப்பட்டு விட்டாலும், தகவல் தொடர்பு மற்றும் இணைய சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்டிருக்கிறது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு அசம்பாவிதங்கள், வீண் பதற்றமும் ஏற்படுகிறது. சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!