கேரள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 104 ஆக உயர்வு!

கேரளாவில் கடந்த 8–ந் தேதி முதல் கனமழை பெய்ததில், வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்ற அசம்பாவிதங்கள் நடந்தன. இவற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. அதிக அளவாக, மலப்புரம் மாவட்டத்தில் 43 பேர் பலியாகி உள்ளனர். மலப்புரம் மாவட்டத்தில் 28 பேர், வயநாடு மாவட்டத்தில் 7 பேர், கோட்டயம் மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 36 பேரை இன்னும் காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயிரத்துக்கு மேற்பட்ட நிவாரண முகாம்களில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தங்கள் பகுதிகளில் தண்ணீர் வடிந்ததை தொடர்ந்து, நிவாரண முகாம்களில் இருந்த பலர் வீடு திரும்பி விட்டனர். 1,116 வீடுகள், முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.

இதற்கிடையே, வெள்ள நிலவரம் குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். வெள்ளத்தால் 1 லட்சத்து 30‌ ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வீடுகளை இழந்தவர்களுக்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடும், வீடு மற்றும் நிலம் இழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் வழங்கப்பட உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!