பலூசிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு: 4 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பிரதேசத்தில் ஒரு மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தான், ஈரான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம், கனிம வளங்கள் நிறைந்த பகுதி என்றாலும், வளர்ச்சியடையாத பகுதியாகவே உள்ளது. பலூசிஸ்தானின் வளங்களை பாகிஸ்தான் சுரண்டுவதாக குற்றம்சாட்டும் அங்குள்ள கிளர்ச்சியாளர்கள், சுயாட்சி உரிமை கோரி போராடி வருகின்றனர்.

பலூசிஸ்தான் கிளர்ச்சியாளர்களில் ஒரு பிரிவினர் தீவிரவாதத் தாக்குதல்களையும் அவ்வப்போது அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில், பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டா அருகே, குச்லக் எனுமிடத்தில் மசூதியில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!