மைத்திரிக்கு பிரதி பிரதமர் பதவி?

கோத்தா-மகிந்த அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதி பிரதமர் பதவி வழங்குவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரவித்துள்ளார்.

“கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாகவும், மகிந்த ராஜபக்ஷவை பிரதமராகவும் கொண்ட அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதி பிரதமர் பதவி வழங்கப்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன.

நாட்டு மக்கள் ஜனாதிபதி தேர்தலை நடத்தப்பட வேண்டும் என எதிர் பார்த்துள்ளதால் அந்த தேர்தலை முதலில் நடத்துவது உசிதம். ஜனாதிபதி தேர்தலோடு மாகாண சபை தேர்தலும் ஒன்றாக நடத்தப்படுவதில் எந்தவித தவறும் இல்லை. ஆனால் அது மயக்கமான நிலைமையை தோற்றுவிக்கும்.

இதேவேளை, நீதிமன்றத்தை நாடி ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் சாத்தியமுள்ளது. ஜனாதிபதி தேர்தல் முதலாவதாகவும் இல்லாவிடின் இரு தேர்தல்களையும் கூட்டாக நடத்தலாம். அவ்வாறு இல்லா விட்டால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனினும் ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது. அவ்வாறான தீர்மானத்தை எடுக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எந்த உரிமையும் இல்லை என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!