ஒக்ரோபர் நடுப்பகுதிக்குள் பலாலியில் இருந்து விமான சேவை

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஒக்ரோபர் நடுப்பகுதிக்குள், விமான சேவைகளை ஆரம்பிக்க தயாராகி விடும் என்றும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உதவித் தலைவர் பிரியந்த காரியப்பெரும தெரிவித்துள்ளார்.

”பயணிகள் விமானங்களை இயக்குவதற்கு ஏற்றவாறு, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விமான நிலைய முனையக் கட்டடம், விமான தரிப்பிடத் தொகுதி, கட்டுப்பாட்டுக் கோபுரம், மற்றும் விமான ஒடுதளம் ஆகியவற்றை அமைக்கும் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

80 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய விமானங்களை இயக்கும் வகையில் இந்த விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும்.

இது பிராந்திய விமான நிலையமாக பயன்படுத்தப்படும். ஒக்ரோபர் நடுப்பகுதியில் இந்த விமான நிலையம் பயணிகள் போக்குவரத்துக்கு தயாராகி விடும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!