ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சு.க.வுடன் இனி பேச வேண்டிய தேவை கிடையாது – பொதுஜன பெரமுன

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பொதுஜன பெரமுன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெக்க வேண்டிய அவசியம் கிடையாது. எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளார். கொள்கை ரீதியில் இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடு மாத்திரமே இதுவரையில் எட்டப்பட்டுள்ளது என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இத‍ேவேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான பரந்துப்பட்ட கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நாளை காலை 10 மணியளவில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!