கோத்தாவுடன் ‘அதுபற்றி’ பேசவில்லை!

பொதுஜன பெரமுதுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும், தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்குமிடையில் நேற்றுமுன்தினம் சந்திப்பு இடம்பெற்றது.

உத்தேச ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வழிமுறைகள். புதிய நவீன தொழினுட்ப வழிமுறைகள் பயன்பாடு மற்றும் ஊடகங்கள் வாயிலாக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வரையறை , அடிப்படை தேர்தல் சட்ட விதிமுறைகள் உள்ளிட்ட பொது காரணிகள் மாத்திரம் இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

அமெரிக்க குடியுரிமையினை இரத்து செய்த ஆவணங்களை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ தேர்தல் ஆணையகத்திடம் பொறுப்பளித்ததாக போலியான செய்தி சமூக வலைத்தளங்களின் பகிரப்பட்டுள்ளமை அவதானிக்க முடிகின்றது. இச்சந்திப்பின் போது அமெரிக்க குடியுரிமை தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம் பெறவில்லை. அவை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அந்த வேளையில் கவனம் செலுத்தவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!