மைத்­தி­ரியே ஜனா­தி­பதி வேட்­பாளர் – திட்­ட­வட்­ட­மாக கூறு­கிறார் தயா­சிறி ஜய­சே­கர

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ஆத­ர­வின்றி எந்த கட்­சிக்கும் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற முடி­யாது எனத் தெரி­வித்த அந்த கட்­சியின் பொதுச் செய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வேட்­பா­ள­ராகக் கள­மி­றக்­கு­வது என்ற நிலைப்­பாட்­டி­லி­ருந்தும் தாம் பின்­வாங்­க­வில்லை என்றும் குறிப்­பிட்டார்.

எதிர்­வரும் 3 ஆம் திகதி சுக­த­தாச உள்­ளக அரங்கில் இடம்­பெ­ற­வுள்ள கட்சி சம்­மே­ள­னத்தின் பின்னர் காலி மாவட்­டத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் மாவட்ட சம்­மே­ளனம் இடம்­பெ­ற­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

சுதந்­திர கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்தும் அவர் தெரி­விக்­கையில்,

திங்­கட்­கி­ழமை மாலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இடம்­பெற்ற கட்­சியின் மத்­திய குழு கூட்­டத்தில் பல்­வேறு தீர்க்­க­மான முடி­வுகள் எடுக்­கப்­பட்­டன. குறிப்­பாக சுதந்­திர கட்சி உறுப்­பி­ன­ராக இருந்து கொண்டு ஐக்­கிய தேசிய கட்சி , பொது­ஜன பெர­முன உள்­ளிட்ட வெவ்;வேறு கட்­சி­க­ளுக்­காக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உள்­ளிட்ட சக­ல­ருக்கும் எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்ற யோசனை முன்­வைக்­கப்­பட்டு அந்த யோசனை ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது.

எஸ்.பி.திஸா­நா­யக்க உள்­ளிட்­டோ­ரது பதவி மாத்­தி­ரமே தற்­போது நீக்­கப்­பட்­டுள்­ளது. அவர்­க­ளது கட்சி உறுப்­பு­ரிமை நீக்­கப்­ப­டு­வது குறித்து ஆரா­யப்­ப­ட­வில்லை. எனினும் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்ள தீர்­மா­னத்­திற்கு அவர்­க­ளது பிர­தி­ப­லிப்பு எவ்­வாறு இருக்­கி­றது என்­பதை அறிந்து கொண்ட பின்­னரே அடுத்த கட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். தொடர்ந்து தற்­போது ஐக்­கிய தேசிய கட்சி சார்பில் செய்­பட்டுக் கொண்­டி­ருக்கும் விஜித் விஜி­ய­முனி சொய்சா, பௌசி ஆகி­யோ­ருக்கு எதி­ரா­கவும் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­பது குறித்து எதிர்­கா­லத்தில் ஆரா­யப்­படும்.

காரணம் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி சார்பில் தேர்­தலில் போட்­டி­யிட்டு தோல்­வி­ய­டைந்­த­வர்­க­ளது அர­சியல் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யாக்­கப்­பட்­டி­ருந்த போது, அவர்­களை தேசிய பட்­டி­ய­லுக்­கூ­டாக பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­தது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வே­யாகும். ஜனா­தி­ப­தியின் நம்­பிக்­கைக்கு இவர்கள் துரோ­க­மி­ழைத்­துள்­ளனர். அத்­தோடு தேர்­தலில் வெற்றி பெற்று நேர­டி­யாக பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வா­ன­வர்­களை விட தேசிய பட்­டி­ய­லுக்­கூ­டாக தெரி­வா­ன­வர்­க­ளுக்கு பொறுப்பு கூறல் அதி­க­மாகக் காணப்­ப­டு­கி­றது. அவர்­களில் இதி­லி­ருந்து வில­கவும் முடி­யாது. இவ்­வா­றா­ன­வர்கள் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டாலும் அது கட்­சிக்கு எவ்­வித பாதிப்­பையும் ஏற்­ப­டுத்­தாது.

செப்­டெம்பர் 3 ஆம் திகதி மாநாட்டின் போது சுதந்­திர கட்­சியின் கொள்ளைத் திட்­டங்கள் அறி­யப்­ப­டு­மத்­தப்­படும். அத்­தோடு அந்த மாநாட்டில் எமது பலம் வெளிப்­ப­டு­வதைக் கொண்டு அடுத்த கட்ட அர­சியல் நகர்­வுகள் குறித்து தீர்­மா­னிக்க முடியும். எனவே அது­வ­ரையில் வேட்­பாளர் குறித்து எமக்கு உறு­தி­யாகக் கூற முடி­யாது.

வெகு­வி­ரைவில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ ஆகி­யோ­ருக்­கி­டை­யி­லான சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்­ளது. அத்­தோடு சுதந்­திர கட்­சிக்கும் பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோதா­பய ராஜ­ப­க்ஷ­வுக்கும் இடை­யி­லான சந்­திப்பும் இடம்­பெ­ற­வுள்­ளது. இந்த இரு சந்­திப்­புக்­களும் மிக முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­வை­யான அமையும் என்று எதிர்பார்க்கின்றோம். அத்தோடு இதிலிருந்து சு.கவின் ஆதரவின்றி யாருக்கும் வெற்றி பெற முடியாது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் உரிய நேரத்தில் சுதந்திர கட்சி தீர்க்கமானதொரு முடிவினை எடுக்கும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய எதிர்காலம் குறித்து சுயநலமாக சிந்திக்காது கட்சி ரீதியில் தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளார். எனவே அவ்வாறே எமது தீர்மானம் அமையும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!