இராணுவ புலனாய்வு பணிப்பாளர் அதிரடியாக நீக்கம்

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சூல கொடிதுவக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வுப் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிரிகேடியர் சூல கொடிதுவக்கு, பயிற்சிக்காக வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பப்படவுள்ளார் என கூறப்படுகிறது.

புதிய இராணுவத் தளபதியாக பொறுப்பேற்றதை அடுத்து, லெப். ஜெனரல் சவேந்திர சில்வா முதலாவதாக இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவை மறுசீரமைக்கவுள்ளதாகவும், இதன்போது உயர்மட்ட மாற்றங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!