பொருளாதாரத்தின் மந்தகரமான வளர்ச்சிக்குக் காரணம் இதுதான் – கரு

நாட்டின் அரசியல் தரப்புகள் , மதத்தலைவர்களும் புத்திஜீவிகள் சமூகமும் ஒருங்கிணைந்து செயற்படாமையே பொருளாதாரத்தின் மந்தகரமான வளர்ச்சிக்குக் காரணமாக உள்ளது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருக்கிறார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வியாழக்கிழமை தனது டுவிட்டர்பக்க பதிவொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

இலங்கையானது உயர்ந்த – நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற மட்டத்தை அடைந்திருக்கிறது. இது சற்றே தாமதமான அடைவு என்றாலும் கூட தெற்காசிய நாடுகளில் முதலாவதாக இம்மட்டத்திற்கு இலங்கை உயர்ந்திருக்கின்றது.

இந்நிலையில் நாட்டின் அரசியல் மற்றும் மதத்தலைவர்களும் புத்திஜீவிகளும் எவ்வாறு ஒருமித்துச் செயற்படுவது என்ற விடயத்தைக் கற்றுக்கொண்டால், எமது நாட்டின் பொருளாதாரம் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர்வது மேலும் இலகுவானதாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!