குண்டுதாரியில் உடலை அகற்ற உத்தரவு!

மட்டக்களப்பு – சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் உடற்பாகங்களை தோண்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றது. இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய புதைக்கப்பட்ட உடற்பாகங்களை இன்று 4 மணியளவில் தோண்டி எடுப்பதற்குரிய நடவடிக்கைகள் நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளன.

குறித்த தற்கொலைதாரியின் உடலை பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் மாவட்டத்தில் உள்ள ஒரு மயானத்தில் புதைக்கவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என்றும் இந்து மயானத்தில் புதைத்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த நீதிமன்றம் கட்டளை பிறப்பிக்கவில்லை என்றும் தெரிவித்த நீதிபதி, அரசாங்க அதிபர் செய்த தவறே இந்த பிரச்சினைக்கு காரணம் என தெரிவித்தார்.

கடந்த 26ஆம் திகதி மாலை மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் சீயோன் தாக்குதல்தாரியின் உடல் இரகசியமாக புதைக்கப்பட்டது. இதனையடுத்து இந்த செயற்பாடுக்கு எதிராக கடந்த 27ஆம் திகதி இரவு மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!