கோத்தாபயவை தோற்கடிக்கும் சூத்திரம் தயார் ; அடுத்த வாரம் கூட்­டணி உதயம் என்கிறார் ராஜித

ஜன­நா­யக தேசிய முன்­ன­ணிக்­கான யாப்பை உரு­வாக்கும் பணிகள் முழு­மை­ய­டைந்­துள்­ளன. ஜன­நா­யக தேசியக் கூட்­டணி கைச்­சாத்­தி­டப்­படும் போது ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அறி­விக்­கப்­ப­டுவார்.

எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ தனது குடும்ப உறுப்­பி­னரை கள­மி­றக்­கி­யதை போன்று குடும்ப உறுப்­பி­னரை கள­மி­றக்க வேண்­டிய தேவை எமக்கு கிடை­யாது என்று சுகா­தா­ரத்­துறை அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

ல­ரி­மா­ளி­கையில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியி­டு­கை­யி­லேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜன­நா­யக தேசிய முன்­னணி
ஐக்­கிய தேசிய முன்­னணி தனது பங்­காளி கட்­சி­க­ளுடன் ஒன்­றி­ணைந்து உரு­வாக்க தீர்­மா­னித்­தி­ருந்த ஜன­நா­யக தேசிய முன்­னணி கடந்த மாதம் 5ஆம் திகதி நிறைவு பெறும் நிலையில் இருந்­தது. உரு­வாக்­கப்­பட்ட கட்சி யாப்பில் திருத்­தங்­களை மேற்­கொள்ளவேண்­டிய தேவை காணப்­பட்­டதால் கூட்­டணி விவ­காரம் பிற்­போ­டப்­பட்­டது.

கட்­சியின் யாப்பு உரு­வாக்கம் தொடர்பில் கடந்த இரண்டு வார கால­மாக பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் பேச்­சு­வார்த்தை இடம்பெற்­றது. பங்­காளி கட்­சி­களின் பரிந்­து­ரை­க­ளுக்கும் முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஜன­நா­யக தேசிய முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் கட்­சியின் தலை­மைத்­துவ சபை­யினால் பெயர் குறிப்­பி­டப்­பட்டு கூட்­ட­ணியின் ஊடாக தெரிவு செய்­யப்­ப­டுவார். பொதுச்­செ­ய­லாளர் காரி­யா­லய செயற்­பா­டுகள் சுயா­தீ­ன­மாக செயற்­படும். உள்­ளிட்ட விட­யங்கள் தற்­போது நிறைவுப் பெற்­றுள்­ளன. அடுத்த மாதத்தின் முதல் வாரத்­திற்குள் கூட்­டணி நிச்­சயம் ஸ்தாபிக்­கப்­படும்.

கொள்கை திட்டம்
ஜன­நா­யக தேசிய முன்­ன­ணியின் கொள்கை திட்­டங்கள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டதை தொடர்ந்தே ஜனா­தி­பதி வேட்­பாளர் அறி­விக்­கப்­ப­டுவார். புதிய அர­சியல் பய­ணத்தை நோக்­கிய கொள்கை திட்டம் உரு­வாக்­கப்­படவேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது.

கொள்­கைத்­திட்டம் உரு­வாக்­கலில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க, மனோ கனேசன், ரிஷாத் பதி­யுதீன், அகில விராஜ் காரி­ய­வசம், ரவி கரு­ணா­நா­யக்க, கபீர் ஹசிம், மற்றும் திகாம்­பரம் ஆகியோர் செயற்­ப­டு­வார்கள். தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சி­யல்­வா­தி­களின் பரிந்­து­ரை­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­படும்.

ஐ.தே.க. வின் உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ரான ஒழுக்­காற்று நட­வ­டிக்கை
கட்­சியின் கொள்­கை­க­ளுக்கு அப்பால் சென்று செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும். எவரும் விதி­வி­லக்கு கிடை­யாது. வீதி­களில் கோஷம் எழுப்பி ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரிவு செய்ய முடி­யாது. கடந்த நாட்­களில் ஐக்­கிய தேசிய கட்­சியின் உறுப்­பி­னர்கள் முன்­னெ­டுத்த பேரணி கட்­சி­யினை அவ­ம­திப்­ப­தா­கவே காணப்­பட்­டது.

கட்­சியின் தலை­மைத்­து­வத்­தி­னையும், கொள்­கை­க­ளையும் இழி­வுப்­ப­டுத்தி ஒரு­போதும் ஜனா­தி­பதி உள்­ளிட்ட முக்­கிய பத­வி­களை ஒரு­போதும் பெற்று விட முடி­யாது. கட்­சி­யினை பலப்­ப­டுத்­தியே சிறந்த அர­சி­யலை முன்­னெ­டுத்து செல்லவேண்டும்.

ஊடக சுதந்­திரம்
நல்­லாட்சி அர­சாங்கம் ஊட­கங்­க­ளுக்கு பெற்றுக் கொடுத்த சுதந்­திரம் தற்­போது மறக்­கப்­பட்­டுள்­ளது. இன்று சில ஊட­கங்கள் ஊடக தர்­மத்­திற்கு அப்பாற் சென்று செயற்­ப­டு­வது வருத்­தத்­திற்­கு­ரி­யது. இன்று ஜனா­தி­பதி, பிர­தமர் உட்­பட அரச அதி­கா­ரிகள் ஊட­கங்­க­ளினால் சரியோ, பிழையோ பகி­ரங்­க­மாக விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றார்கள். ஆனால் கடந்த நான்கு வருட கால­மாக எந்த ஊட­க­வி­ய­லா­ளரும் படு­கொலை செய்­யப்­ப­டவும், இல்லை தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கவும் இல்லை.

கடந்த அர­சாங்­கத்தில் ஊடக சுதந்­திரம் எவ்­வாறு காணப்­பட்­டது என்­ப­தற்கு லசந்த விக்­ர­ம­துங்க உட்­பட ஊட­க­வி­ய­லா­ளர்­களின் படு­கொலை ஒரு எடுத்­துக்­காட்­டாகும். ஜன­நா­ய­கத்தை மீறி சர்­வா­தி­கா­ர­மாக செயற்­பட்­ட­வர்கள் இன்று ஜன­நா­யகம் பற்றி கருத்­து­ரைப்­பது நகைப்­பிற்­கு­ரி­யது. ஊட­க­வி­ய­லா­ளர்கள் அப்­போது மதிக்­கப்­ப­ட­வில்லை. இதன் தொடர்ச்­சியே பொது­ஜன பெர­மு­னவின் இளைஞர் மாநாட்டில் இடம் பெற்­றது.

படு­கொலை செய்­யப்­பட்ட ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­ர­ம­துங்க மற்றும் ரக்பி வீரர் தாஜீதின் ஆகி­யோ­ரது உற­வி­னர்­களை காணும் போது வெட்கி தலை­கு­னிய வேண்­டிய நிலை தற்­போது காணப்­ப­டு­கின்­றது. சுதந்­திர கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ள­ராக செயற்­பட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 2015ஆம் ஆண்டு தேர்தல் பிரச்­சார மேடை­களில் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­திகள் அனைத்­தையும் முழு­மை­யாக மறந்து விட்டார்.

வடக்கு உள்­ளிட்ட நாட்டில் வாழும் தமிழ் மக்கள் இன்று உரி­மைக்­காக வீதியில் இறங்கி சிங்­கள மக்­க­ளுக்கு நிக­ராக அர­சாங்­கத்­தினை விமர்­சிக்­கின்­றார்கள். இந்த சுதந்­தி­ரமே நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பிர­தான வெற்­றி­யாகும். கடந்த அர­சாங்­கத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. எவரும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்கப்படவில்லை. இனவாத அரசியலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை தோல்வியடைய செய்யும் சூத்திரம் பலமாக தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் தகுந்த பதிலடி வழங்கப்படும். தமிழ் மக்களின் முழுமையான ஆதரவுடன் ஐக்கிய தேசிய கட்சி நிரந்தர பலமான ஒரு தலைமைத்துவத்தினை முதலில் உருவாக்கி அதனூடாக ஜனநாய மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு நிச்சம் தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!