“தேசிய உற்பத்தியை மேம்படுத்தினால் மாட்டுமே தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்”

தேசிய உற்பத்திகளை மேம்படுத்தினால் மாத்திரமே தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் சிறு ஏற்றுமதி உற்பத்தியாளர் சங்கத்தின் தேசிய மாநாடு இன்று கொழும்பில் உள்ள கண்காட்சி காட்சிப்படுத்தல் அரங்கில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார.

கடந்த அரசாங்கத்தின் தேசிய உற்பத்திகளை வலுப்படுத்துவதற்கான பல்வேறு செயற்திட்டங்கள் கிராமத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டன. குறிப்பிட்ட சில செயற்திட்டங்களும் பாரிய வெற்றிப்பெற்றன. இச்செயற்திட்டங்கள் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்பட்டதா என்பது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

தேசிய உற்பத்தியாளர்கள் இன்று சுய தொழில்களை கைவிட்டு இரண்டாம், மூன்றாம் தரப்பு வர்த்தக தொழில்களை தேசிய உற்பத்தியாளர்கள் பாதுகாக்கப்படவில்லை. இறக்குமதி உற்பத்திகளுக்கு மாத்திரம் முன்னுரிமை கொடுக்கப்பட்டமையினால் தேசிய உற்பத்திகள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஒரு சில மொத்த வியாபாரிகளின் சுய நல தேவைகளுக்காக ஒட்டுமொத்த சிறு ஏற்றுமதி உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தேசிய பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் தேசிய உற்பத்திகள் முன்னேற்றமடைய வேண்டியது. அவசியமாகும். .இன்று சிறு ஏற்றுமதி உற்பத்திகள் இறக்குமதி செய்யப்படும்நிலைக்கு தேசிய உற்பத்திகள் பலவீனமடைந்துள்ளது. இந்நிலைமை முழுமையாக மாற்றியமைக்கும். எமது ஆட்சியில் தேசிய உற்பத்திகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!