சர்­வ­தேச சட்­டங்­களை மீற­மு­டி­யாது.!

இரா­ணு­வ­மாக நாம் எப்­போதும் சர்­வ­தேச சட்­டங்கள், பொது உடன்­ப­டிக்­கைகள் என்­ப­வற்றில் இணக்கம் தெரி­வித்­துள்ள நிலையில் அர­சியல் அமைப்பு மற்றும் சட்ட திட்­டங்­க­ளுக்கு அமைய எமது கட­மை­க­ளையும் பொறுப்­பு­க­ளையும் முன்­னெ­டுக்க வேண்டும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

மாதுரு ஓய இரா­ணுவ பயிற்சிப் பாட­சா­லையில் பயிற்சி பெற்றவர்கள் வெளி­யேறும் நிகழ்வு நேற்று ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் இடம்­பெற்­றது. இந்த நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்,

எமது இரா­ணுவம் எப்­போதும் ஐக்­கிய நாடுகள் சபையின் கௌர­வத்தை பெற்ற இரா­ணு­வ­மாக செயற்­பட்டு வரு­கின்­றது. சர்­வ­தேச ரீதி­யிலும் எமது இரா­ணு­வத்­திற்கு நல்­ல­தொரு வர­வேற்பு உள்­ளது. அதன் கார­ண­மா­கவே ஐக்­கிய நாடு­களின் அமை­திப்­ப­டையின் சேவையில் எமது சிறப்புப் படை­களை இணைத்­துக்­கொள்ள முடி­யு­மாக உள்­ளது. ஆகவே நாம் எப்­போதும் சர்­வ­தேச சட்­டங்கள், பொது உடன்­ப­டிக்­கைகள் என்­ப­வற்றில் இணக்கம் தெரி­வித்து இலங்­கையின் அர­சியல் அமைப்பின் பிர­காரம், பாது­காப்பு அமைச்சின் கீழ் கடைப்­பி­டிக்கும் அர­சியல் அமைப்பு மற்றும் சட்ட திட்­டங்­க­ளுக்கு அமைய எமது கட­மை­க­ளையும் பொறுப்­பு­க­ளையும் முன்­னெ­டுக்க வேண்டும்.

பாது­காப்­புப்­படை தமது சேவை­களை நிறை­வேற்றும் போது ஆயு­தங்­க­ளினால் மட்­டு­மன்றி அறிவு, இய­லுமை, ஆக்­கத்­திறன் என்­ப­வற்­றி­னாலும் பலம்­பெற்று அவர்களது திறமைகளை வெளிக்காட்ட வேண்டும். இதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!