கட்சி நிராகரித்தால் பின்வாங்குவேன்!

கட்சி நிராகரித்தால் ஜனாதிபதி வேட்பாளர் கோரிக்கையை கைவிடவும் தயாராக இருப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று காலை விசேட ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

‘ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கான சகல தகுதிகளும் எனக்கு உள்ளது. அதற்கான மக்கள் ஆணையும் எனக்கு இருக்கின்றது. கட்சிக்குள் பல ஜனாதிபதி வேட்பாளர்கள் இருப்பதால், நல்லிணக்கத்தை நீடிக்க செய்ய உடனடியாக கட்சிக் கூட்டங்களை நடத்தி, ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்க வேண்டும். தேவைப்படின் இரகசிய வாக்கெடுப்பை நடத்தலாம். இது பிரதமருக்கான தேர்தல் அல்ல. ஜனாதிபதி தேர்தல் என்பதையும் பிரதமர் மனதில் வைத்திருக்க வேண்டும்.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவேன். அதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற் குழுவிலும், நாடாளுமன்ற குழுவிலும் வாக்கெடுப்பை எதிர்கொள்ள எதிர்பார்த்துள்ளேன். கட்சித்தாவும் திட்டம் இல்லை. கட்சி நிராகரித்தால், ஜனாதிபதி வேட்பாளர் கோரிக்கையை கைவிடவும் தயார்’ என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!