தேர்தலை எதிர்கொள்ளும் அச்சத்தில் பிரதமர்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை நீக்கும் முயற்சியை ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக கைவிட வேண்டும். ஜனாதிபதி தேர்தலை எதிர்க்கொள்ளும் அச்சத்தின் காரணமாகவே பிரதமர் இவ்வாறான செயற்பாடுகளை தற்போது முன்னெடுக்கின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி தேர்தலை எதிர்க் கொள்ள தயாரில்லை. தேர்தலை எதிர்க் கொள்ள முடியாவிடின முறையாக விலகிக் கொள்ள வேண்டும். அதனை விடுத்து மக்களின் அடிப்படை உரிமைகளை தமது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள கூடாது.

எல்பிடிய பிரதேச சபை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும். அத்தேர்தலை நடத்த வேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளமை முறையற்ற ஒரு செயற்பாடாகும் என்றும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!