மங்களவின் பகிரங்க விவாத அழைப்பிற்கு வெளுத்துக் கட்டிய நாமல்!!!

மஹிந்த ராஜபக்ஷ சொல்வதை செயலில் காட்டிய தலைவர் அவரோடு விவாதத்திற்கு வரும் முன்னர் செயலில் காட்டுங்கள்” என பாராளுமன்ற அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அரச கடன் தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு மங்கள சமரவீர டுவிட்டர் அழைப்பொன்றை விடுத்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் முகமாகவே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்ததாவது,

“மஹிந்த ராஜபக்ஷவிற்கு அமைச்சர் மங்கள சமரவீரவோடு விவாதம் செய்து கொண்டிருக்க நேரமில்லை. அவர் இன்னும் மக்களுக்கு சேவை செய்து கொண்டு தான் இருக்கிறார். மேலும் அவர் சொல்வதை செயலில் காட்டியவர். இந்த அரசாங்கம் கதை பேசி பேசி மூன்றரை வருடங்களில் செய்தது ஒன்றுமில்லை.

விவாதத்திற்கு முன்னர் செயலில் காட்டுங்கள். சொல்வதை செயலில் காட்டும் முன் விவாதத்திற்கு அழைப்பது கேலிக்கையாக இருக்கிறது. தென் மாகாணத்தில் இப்போதைக்கு பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் மக்கள் பாதிப்படைந்துள்ளார்கள்.

தென் பகுதியில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் சிறுவர்கள் உயிரிழக்கிறார்கள் அது தொடர்பாக வேலைத்திட்டத்தை மேற்கொள்ள முடியாத அரசாங்கம் இது…

பாதாள உலகம் தலைத்தூக்கியுள்ளது. சிறுவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை மேலோங்கியுள்ளது. அதனால் கேலிக்கை கதை பேசிக் கொண்டிராது குறைந்த பட்ச பிரச்சினைகளையாவது தீர்த்து வையுங்கள். அபிவிருத்தி என்பது இவ் அரசாங்கத்தில் கனவு தான்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!