கோத்தாவுக்கு ஆப்பு வைத்தது அமெரிக்கா!

அமெரிக்க குடியுரிமையை நீக்குமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை அமெரிக்க அரசாங்கம் நிராகரித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை மற்றும் அமெரிக்க இரட்டைக் குடியுரிமையை கொண்டுள்ள கோத்தபாய, அமெரிக்க குடியுரிமையிலிருந்து விலகிக் கொள்ளும் விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவின் குடியேற்ற மற்றும் தேசிய சட்டத்தின் கீழுள்ள சில சிறப்பு விதிகளின் கீழ் கோத்தபாயவின் குடியுரிமையை நீக்க முடியாது என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

2020ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடத் திட்டமிட்டுள்ளார். இலங்கையில் அரசியலமைப்பின் படி, இரட்டை குடியுரிமை கொண்ட ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது. அதற்கமைய எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்பார்ப்பில் தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!