நீதியற்ற முறையில் செயற்படுகிறது அரசாங்கம்!

சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றம்சுமத்தப்பட்ட படையினர் விடயத்தில் அரசாங்கம் நீதியற்ற முறையில் செயற்படுகின்றது என்று சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கையில் போர் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது பொதுமக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய படையினர் விடயத்தில் அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. செய்தியாளர் பிரகீத் எக்னெலிகொட உட்பட்ட பலர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் அதிகாரிகள் சிறிதளவான முன்னேற்றத்தையே கண்டுள்ளனர்.

இந்நிலையில் பல சம்பவங்கள் நீதிக்கு புறம்பாக மறைக்கப்பட்டுள்ளன. போர்க்குற்றம் சுமத்தப்பட்ட சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 58வது படையணியின் தளபதியாக இருந்தபோது மனிதத்துவத்துக்கு எதிரான பல குற்றம் புரியப்பட்டன. எனினும் அரசாங்கம் அதனையும் மறந்து அவரை இராணுவத்துக்கு தளபதியாக நியமித்துள்ளது.

இதேவேளை கொழும்பில் 11 பேர் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்ட கடற்படையின் இரண்டு அதிகாரிகள் அண்மையில் பதவியுயர்த்தப்பட்டுள்ளமையானது ஏற்கத்தக்க செயலல்ல என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!