வேட்புமனு தாக்கலுக்கு முன் கோத்தபயவை கைது செய்ய அரசாங்கம் முயற்சி – விமல் வீரவன்ச

ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவை கைது செய்ய அரசாங்கம் தற்போது பல முயற்சிகளை மேற்கொள்கின்றது.

சட்டத்தை தனது தேவைக்கேற்ப உருவாக்க முடியும் என்று குறிப்பிடும் சட்டமா அதிபர் திணைக்கள சொலிஸ்டர் ஜனரால் தில்ருக்ஷி டயஸ் விக்ரமரத்ன பதவி விலக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான பலமாக அரசாங்கம் நிச்சயம் இன்னும் இரு மாத காலத்திற்குள் தோற்றம் பெறும். பொதுஜன பெரமுன தற்போது தேர்தலின் வெற்றியை இலக்காகக் கொண்டு செயற்திட்டங்களை நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கு வருகின்றது.

எதிர் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சார்பில் நேற்று கட்டுப்பணத்தினையும் செலுத்தியுள்ளோம். இதுவரையில் எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல் முறையாக தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன்னர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவை கைது செய்ய அரசாங்கம் தற்போது பாரிய முயற்சிகளை மேற்கொள்கின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!