தென் கொரியாவை வாட்டி எடுத்த புயல்!

தென் கொரியாவின் பல்வேறு பகுதிகளில் கடும் புயல் தாக்கியதையடுத்து, சுமார் 250 விமானங்களின் பயண சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தென் கொரியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு நாட்களாக கடுமையான புயல் புரட்டி எடுத்துவருகிறது. இதனால் அங்குள்ள ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடி தரைவழி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் தாக்குதலில் சிக்கியவர்களில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் சுமார் 26 பேர் லேசான காயம் அடைந்துள்ளதாகவும் தென் கொரிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் வான் வழி போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 11 விமான நிலையங்களில், சுமார் 250 விமானங்களின் பயண சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!