முடிவை மறுபரிசீலனை செய்கிறதாம் ஐ.நா – சிறிலங்கா இராணுவத் தளபதி கூறுகிறார்

ஐ.நா அமைதிப்படையில் இருந்து சிறிலங்கா படையினரை வெளியேற்றும் முடிவு தொடர்பாக, ஐ.நா மறுபரிசீலனை செய்து வருவதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டி – தலதா மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“ஐ.நா அமைதிப்படையில் இலங்கைப் படையினர் பங்கேற்பது குறித்த முடிவை ஐ.நா மறுபரிசீலனை செய்து வருகிறது.

இதுதொடர்பாக, இன்னமும், ஐ.நா அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை.

வேலைநிறுத்தப் போராட்டங்களினால் சீர்குலைந்துள்ள அவசர சேவைகளை மீண்டும் வழங்குவதற்கு அரசாங்கத்தினால் உதவி கோரப்பட்டால், எந்த நேரத்திலும் ஒத்துழைக்க இராணுவம் தயாராக இருக்கிறது.

சிறிலங்கா இராணுவம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது, இது தொடர்பாக ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!