சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை – கேள் அமர்வை நடத்தவுள்ள அமெரிக்கா

சிறிலங்கா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்த கேள் அமர்வு ஒன்றை அடுத்த மாதம் நடத்தவுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசியாவுக்கான உபகுழுவே இந்த அமர்வை நடத்தவுள்ளது.

அமெரிக்க காங்கிரசின் வெளிவிவகாரக் குழு உறுப்பினர்கள் மத்தியில், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் கடந்த வாரம் பேசியிருந்தார்.

இதன்போது, ஒக்ரோபர் மாதம் தெற்காசியாவின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்த திறந்த கேள் அமர்வு ஒன்றை நடத்துவது குறித்தும் தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த கேள் அமர்வில் சிறிலங்கா, பாகிஸ்தான், இந்தியா, மியான்மார், உள்ளிட்ட நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!