மைத்திரியுடன் சஜித் சந்திப்பு – சுதந்திரக் கட்சியின் ஆதரவைப் பெற முயற்சி

ஐதேகவின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று பின்னிரவு, முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இந்தப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

சஜித் பிரேமதாசவின் கோரிக்கைக்கு அமைய இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் ஐதேகவின் பொதுச்செயலர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்டஐதேக குழுவினரும் கலந்து கொண்டுள்ளனர்.

எனினும், இந்தப் பேச்சுக்கள் தொடர்பான எந்த விபரமும் வெளியாகவில்லை.

கடந்தவாரம், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவையும் சிறிலங்கா அதிபர் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

ஆனாலும், பொதுஜன பெரமுன தனது மொட்டு சின்னத்தை விட்டுக் கொடுக்க மறுத்து வருவதால், கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடியாது என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே சஜித் பிரேமதாசவின் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!