அதிபர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் செயலகங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை

சிறிலங்கா அதிபர் செயலகம், பிரதமர் செயலகம், எதிர்க்கட்சித் தலைவர் செயலகம் ஆகியவற்றை, அதிபர் வேட்பாளர்களின் பரப்புரைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது.

கடந்த புதன்கிழமை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்த போது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இது தொடர்பாக அறிவித்துள்ளார்.

அதிபர் வேட்பாளர்களுக்கு ஊக்கமளிக்கும் செயற்பாடுகளுக்கு இந்த மூன்று செயலகங்களையும் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்கள் வரும் 7ஆம் நாள் ஏற்றுக் கொள்வதற்கிடையில், அனைத்து வேட்பாளர்களினதும் பதாதைகள் மற்றும் சுவரொட்டிகள் அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!