அதிபர் தேர்தலுக்கு எதிராக மனு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அறிவிப்புக்குத் தடைவிதிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

காலி மாநகர முன்னாள் முதல்வர் மெத்சிறி டி சில்வா இந்த மனுவை நேற்று தாக்கல் செய்திருந்தார்.

17 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய, 6 ஆண்டுகள் பதவிக்காலத்துக்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்ட நிலையில், அவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் முடியும் முன்னரே தேர்தல்கள் ஆணைக்குழு வேட்புமனுக்களைக் கோரியுள்ளதாகவும், எனவே வேட்புமனுக்களை கோரி வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்பை செல்லுபடியற்றதென அறிவிக்குமாறும் கோரி இந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!