வேட்பாளர் அதிகரிப்பு- 5000 மில்லியன் ரூபா செலவு!

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதற்தடவையாக அதிக எண்ணிக்கையான வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதனால் இம்முறை தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் வழமைக்கும் மாறான வேலைப்பளுவுக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

“ கட்டுப்பணம் செலுத்திய அனைவரும் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என நம்புகின்றோம். இதனால் இம்முறை அதிக எண்ணிக்கையிலான வாக்கு எண்ணும் நிலையங்கள் தேவைப்படும். செலவும் அதிகரிக்கும். தற்போது ஜனாதிபதி தேர்தலுக்காக நான்காயிரம் மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. இது 4500 மில்லியன்கள் வரை அதிகரிக்குமென எதிர்பார்த்திருந்தோம். எனினும் கட்டுப்பணம் செலுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதனால் செலவீனம் சுமார் 05 ஆயிரம் மில்லியன் ரூபாய் வரை அதிகரிக்ககூடுமென்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!